பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக அர்ச்சுனன் தவம் செய்த இடங்களுள் ஒன்று. அர்ஜீனனுக்கு 'விஜயன்' என்ற பெயரும் உண்டு. அதனால் இத்தலம் 'விஜயமங்கை' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'விஜயநாதர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'மங்கை நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா 1 பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
|